அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி
திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றார்.
இது ஒருபுறம் இருக்க பல்வேறு நாடுகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், இலங்கையின் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ்மன்ற உறுப்பினர் டேனி கே டேவிசு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை கொண்டுவந்தார்.