\
பிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு

பிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு

பிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு
Published on

ஒகி புயலால் பாதிப்படைந்துள்ள பிரதமரின் திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒகி புயல் விவசாயிகள் பாதிப்பு மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 819 விவசாயிகள் பதிவுசெய்துள்ளதாக கூறியுள்ளது.

அத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 14,269 விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் நெல்லுக்கு காப்பீடு பதிவு செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மத்திய வேளாண்துறை தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் நெல்லுக்கு ஏக்கருக்கு 29,000 ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com