தமிழ்நாடு
பீட்டா பற்றி பேசுவதே அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
பீட்டா பற்றி பேசுவதே அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழ் கலாச்சாரத்துக்கு பொருத்தமில்லாத பீட்டா அமைப்பை பற்றி பேசவே தாம் அவமானப்படுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தை காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாக குற்றம்சட்டினார். முன்னதாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.