காரில் இறங்கி தொண்டர்களை சந்தித்த அமித்ஷா.. மின்சாரம் தடைபட்டதால் சாலைமறியலில் குதித்த பாஜகவினர்!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்றிரவு சென்னை வந்தடைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எதிர்க்கட்சிகளைப் போலவே, ஆளும் பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தங்களுக்குச் சவாலாக இருக்கும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமான நிலையத்தின் வெளியில் வந்ததும் மின்சாரம் துண்டிக்கபட்டதால் பாஜக சாலை மறியலில் ஈடுபட்டடு வருகின்றனர். அவர்கள், ’திமுக ஒழிக’ என கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ’உள்துறை அமைச்சர் உயிருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என கூறி பாஜகவினர் - போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் அமித் ஷா, சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்றார். அவரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை வந்திருக்கும் அமைச்சர் அமித்ஷாவை, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, சீனிவாசன், பி.ஆர்.ராஜன், பிரித்தா ரெட்டி, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், ஆற்காடு நவாப் முகமது அலி உள்ளிட்ட பிரபலங்கள் சந்திக்க இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com