அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்றிரவு சென்னை வருகிறார். அவரது வருகை, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எதிர்க்கட்சிகளைப் போலவே, ஆளும் பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தங்களுக்குச் சவாலாக இருக்கும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், தமிழகத்தின் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக மாநில மையக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக அமித் ஷா பயணத்தின்போது விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுதவிர, ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல்போக்கு பற்றியும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கோவிலம்பாக்கத்தில், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அமித்ஷா, தேர்தல் வியூகம் குறித்து கட்சியினருக்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்துப் பேச உள்ளார்.

அமித்ஷாவின் வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அளித்துள்ள கருத்துக்களை கீழே உள்ள வீடியோ தொகுப்பில் காணலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com