தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழக உரிமைகளை பறிக்க முயல்கிறது மத்திய அரசு – உதயநிதி ஸ்டாலின்..!
செய்தியாளர்: சந்தான குமார்
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...
இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள், பல்வேறு முதலமைச்சர்கள் தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். தமிழக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயல்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற நடைமுறை மூலம் தமிழகத்தில் எட்டு தொகுதிகளை இழக்க நேரிடும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் திறக்கும்போது பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் நாடாளுமன்ற எம்பி-களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தது இருந்தனர். எவ்வளவு எண்ணிக்கையில் எம்பி-கள் தொகுதிகள் அதிகரிக்கப்படுகிறது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தமிழகத்துக்கு எம்பிக்கள் தொகுதிகள் குறைப்பதில் நியாயமில்லை.
வட மாநிலங்களில் எம்பி-கள் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா இல்லையா என்பது குறித்து தெளிவாக மத்திய அரசு கூறுவதில்லை. திமுகவின் வலியுறுத்தல், அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளோம். அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று உதயநிதி தெரிவித்தார்.