சென்னை: கோயில் வாசலில் ஐம்பொன் சிலைகளை வைத்துசென்ற அடையாளம் தெரியாத நபர்கள்

சென்னை: கோயில் வாசலில் ஐம்பொன் சிலைகளை வைத்துசென்ற அடையாளம் தெரியாத நபர்கள்
சென்னை: கோயில் வாசலில் ஐம்பொன் சிலைகளை வைத்துசென்ற அடையாளம் தெரியாத நபர்கள்

சென்னையில் ஐம்பொன்னிலான மூன்று சிலைகளை முத்துமாரி அம்மன் ஆலயம் முன்பு அடையாளம் தெரியாத சில நபர்கள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஜாம்பஜார் ஆறுமுகப்பா தெரு முத்துமாரியம்மன் கோயில் முன்பு இந்நிகழ்வு நடந்துள்ளது. இதுதொடர்பாக திமுக 115 வது வட்ட செயலளார் செந்தில்குமார் என்பவர் ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக போலீசார் நேரில் சென்று சிலைகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைப்பற்ற மூன்ற சிலைகளில் அம்மன் சிலை 3/4 அடி உயரம், கிருஷ்ணன் சிலை 1 அடி உயரம் என்றிருந்துள்ளது. இவற்றுடன் அன்னபூரணி சிலை மற்றும் பிரபை 2 அடி சங்கு ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சிலையை வைத்து சென்றவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிலைகள் திருடப்பட்டதா அல்லது அவை பழங்கால சிலைகளா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சிலைகளை கொண்டு வந்த நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com