சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்
சென்னையை அடுத்த திருநின்றவூரில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சிக்கனில், புழுக்கள் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிரியாணியில் இருந்த சிக்கனில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். சுகாதாரமற்ற உணவு குறித்து உரிய பதிலளிக்காத உணவகம், இதற்கு பதிலாக வேறு உணவு தருவதாக தெரிவித்துள்ளது.
(மாதிரிப்படம்)
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர், சிக்கன் பிரியாணியை படம் பிடித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்கிடையே சிக்கனில் புழு இருந்ததற்கு கோழி இறைச்சி விற்ற கடையே காரணம் என்றும், அந்த கடை மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.