''உங்களைத் தேடி... உங்கள் ஊரில்'' திட்டம்.. இன்றுமுதல் அமல்

"உங்களைத் தேடி ஊங்கள் ஊரில்" திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உங்களைத் தேடி... உங்கள் ஊரில்
உங்களைத் தேடி... உங்கள் ஊரில்ட்விட்டர்

"உங்களைத் தேடி ஊங்கள் ஊரில்" திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

உங்களைத் தேடி... உங்கள் ஊரில்
“டாக்டர்.. உங்க ஷிப்ட் என்ன? எங்க இருக்கீங்க?” - நடைப்பயிற்சியின் போது ஆய்வுக்குசென்ற அமைச்சர் மா.சு

முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், ஆட்சியர் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

முகாமில் மக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அதன் மீது ஆட்சியர்கள் உரிய தீர்வு காண்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com