\
கூண்டு வைத்தும் பிடிப்படாத கரடி

கூண்டு வைத்தும் பிடிப்படாத கரடி

கூண்டு வைத்தும் பிடிப்படாத கரடி
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றி வரும் கரடியைப் பிடிக்க கூண்டு வைத்தும் எந்தப் பலனும் இல்லாததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். 

சில தினங்களுக்கு முன் கோத்தகிரியை அடுத்த குருக்கத்தி கிராமத்திற்குள் கரடி நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வர தயங்கினர். இதனை தொடர்ந்து கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் கரடி இன்னும் கூண்டிற்குள் சிக்காததால் இப்பகுதியில் பணியாற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கூண்டினை வேறு இடத்திற்கு மாற்றி வைக்குமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com