சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார் ?

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார் ?
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார் ?

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்திய தூதர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அசாரை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவு அளித்தன.

யார் இந்த மசூத் அசார்?

மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூரில் 1968ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்தவர். இவர் 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி பிறந்தவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. அசாரின் தந்தை அல்லா பக்ஷ் ஷபீர்.இவர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். அசார் உடன் பிறந்தவர்கள் 10 பேர். மொத்தம் 11 பேரில் 3ஆவதாக பிறந்தவர் அசார். கராச்சியில் படிப்பை முடித்த அசார் ஹர்கத்-உல்-அன்சார் என்ற அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 

சோவியத்-ஆப்கான் இடையேயான போரில் காயமடைந்த அசார், ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் ஒருபிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் உருது பத்திரிகையான சதே முஜாஹிதீன் மற்றும் அரபு பத்திரிகையான ஸ்வதே காஷ்மீர் ஆகியவற்றின் ஆசிரியராக செயல்பட்டார். ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆனவுடன் நிதி திரட்டுவதற்காக சவுதி, ஜம்பியா, மங்கோலியா, லண்டன், நைரோபி, கென்யா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அப்போது 1994ஆம் ஆண்டு இந்தியாவின் ஸ்ரீநகருக்கு வந்த அசார் இந்திய அரசால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் 1999 ஆம் ஆண்டு நடந்த கந்தஹார் விமானக் கடத்தல் அசார் விடுதலை செய்யப்பட காரணமானது. பணயக் கைதிகளாக இருந்த இந்திய பயணிகளை மீட்க அசாரை விடுவித்தது இந்திய அரசு. அப்போது சிறையில் இருந்து வெளியே வந்த அசார் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரானார். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான பின் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இதனையடுத்து 2002ஆம் ஆண்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட மசூத் அசாரை விடுவிக்கும்படி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் அசார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை பாகிஸ்தான் அரசு மறுத்தது. 2016ம் ஆண்டு ஜனவரி மதாம் ‌2ஆம் தேதி‌ பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் மசூர் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com