தமிழ்நாடு
உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் திடீரென சரிந்து விழுந்த கேலரி
உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் திடீரென சரிந்து விழுந்த கேலரி
ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் செய்தியாளர்கள் நின்றிருந்த கேலரி சரிந்து விழுந்தது. இதில் நல்ல வேளையாக செய்தியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உலகம்பட்டி கிராமத்தில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில் 8 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறிப் பாய்ந்து வரும் காளைகளை வீரத்துடன் அடக்க மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் களமிறங்கினர். இதனை ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர். இதில் செய்தியாளர்கள் நின்றிருந்த கேலரி திடீரென சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக செய்தியாளர்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, கேலரி சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.