\
பிரிட்டன் ரிட்டர்ன் கொரோனா: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று

பிரிட்டன் ரிட்டர்ன் கொரோனா: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று

பிரிட்டன் ரிட்டர்ன் கொரோனா: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று
Published on

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவத் தொடங்கியதை அடுத்து அங்கிருந்து தமிழகம் வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். தமிழகம் திரும்பியோர், அவர்களுடன் விமானத்தில் பயணித்தோர், அவர்களை சந்தித்தோர் என 2391 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் திரும்பியவர்களை பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர், தஞ்சையில் மூவர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருவர் என 10 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com