காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கெடு

காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கெடு

காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கெடு
Published on

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று யூ.ஜி.சி. என்றழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கெடு விதித்துள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு என அழைக்கப்படும் யூஜிசி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், பேராசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ.ஜி.சி.யின் கீழ் உள்ள 48 மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் யூ.ஜி.சி.யின் மேற்பார்வையில் நாடு முழுவதும் 900 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரம் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 6 மாதம் அவகாசம் வ‌ழங்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை பணி நியமன விதிகளின்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நிரப்பப்பட வேண்டும் என்று யூ.ஜி.சி. தெரிவித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களை நிரப்பாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் யூ.ஜி.சி. எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com