தமிழ்நாடு
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு - இன்றும் விசாரணை
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு - இன்றும் விசாரணை
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு விசாரணை இன்றும் நடைபெறுகிறது.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கலப்புத்திருமணம் செய்துகொண்டதால் சங்கர்–கவுசல்யா ஆகியோரை கடந்த மார்ச் 13–ம் தேதி உடுமலைப்பேட்டையில் ஒரு கும்பல் வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சங்கரின் கொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை, தாயார், தாய்மாமா உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.