உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-ல் தீர்ப்பு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-ல் தீர்ப்பு
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-ல் தீர்ப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் டிசம்பர் 12-ஆம் தேதி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் சாலையோரம் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

இந்த ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை, தாய்மாமா, அவரது உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com