உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்

உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்

உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்
Published on

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தை கேரள வனத்துறையினர் அடைத்ததால், குழந்தைகளுடன் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பல நூறு ஆண்டுகளாக சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரள வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கம்பி வேலி அமைத்ததால், மலைவாழ் மக்கள் 6 கிமீ சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கூட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தங்களின் பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்த படி உயிரை பணயம் வைத்து ஆற்றை தினமும் கடந்து செல்கின்றனர்.

மலைவாழ் மக்களுக்கு இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும் ஆற்றை கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பக்காடு பகுதியை மீட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com