தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்

தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்
தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யா, கலந்தாய்வின்போது சென்னை கல்லூரிகளை நிராகரித்ததும் தேனி மருத்துவக் கல்லூரியை வற்புறுத்தி கேட்டதும் தெரியவந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கை சந்தித்து வருகிறார். இதுகுறித்து செய்தியை புதிய தலைமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகாரின் பேரில், கண்டமனூர் விலக்கு காவல்துறையினர், உதித் சூர்யா மற்றும் அவருக்குப் பதிலாக தேர்வு எழுதிய நபர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதித் சூர்யா சீனாவில் 2 மாதங்கள் மருத்துவப் படிப்பு படித்ததாகவும், பின்னர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பி விட்டதாகவும் புதிய தகவல் வெளியானது. இதனிடையே, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று தனிப்படை ஆய்வாளர் உஷா விசாரணை நடத்துகிறார்.

உதித் சூர்யா சேர்க்கைக்காக வந்தபோது உடன் வந்தவர்கள் யார் யார் என்பதை அறிய, கல்லூரி மற்றும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, உதித் சூர்யா சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை விட்டுவிட்டு, கவுன்சிலிங்கின்போது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் ‌அவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள மருத்து‌க் கல்லூரியில் சேர வாய்ப்பு இருந்தும், அதை தவிர்த்து விட்டு தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், மும்பையில்தான் நீட் தேர்வு எழுதப்பட்டதால், முறைகேடு அங்குதான் நடைபெற்றிருக்க வேண்டும் என்று தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com