\
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு!

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு!

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு!
Published on: 

அனுமதி பெறாமல் பரப்புரையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, "எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையும் பரப்புரையை தொடருவேன். அமித்ஷா சாலையில் இறங்கி செல்கிறார். கூட்டம் கூடுகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது அரசின் நிகழ்ச்சி என்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில்தான் அரசியல் பேசி இருக்கிறார்கள். கூட்டணியை அறிவித்துள்ளனர். பாஜகவின் அடிமை அரசான அதிமுகவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்." எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com