\
அண்ணா பல்கலை., ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்

அண்ணா பல்கலை., ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்

அண்ணா பல்கலை., ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்
Published on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் உதயநிதி ஸ்டாலின் உறுப்பினராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதேபோல கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com