“எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம்”- துணை முதல்வர் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

‘துணை முதலமைச்சர் பதவி உங்களுக்கு அளிக்கப்பட உள்ளதா’ என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்pt desk

செய்தியாளர்: விக்னேஷ் முத்து

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘I.N.D.I.A கூட்டணியின் மாணவர் அமைப்பு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கும் நிலையில், தி.மு.க. சார்பிலும் மாணவரணியைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்கு, ‘புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுகவின் மாணவர் அணியினர் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்’ என்றார்.

cm stalin
cm stalinpt desk

தொடர்ந்து “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு திமுகவிற்கு அழைப்பு வந்ததா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அழைப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பதவி உங்களுக்கு அளிக்கப்பட உள்ளதா?” என்ற கேள்விக்கு, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என பதிலளித்தார்.

“பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஆளுநர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்றது கண்டனத்திற்குரியது” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com