\
சூடு பிடிக்கும் தேர்தல்களம்: 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி

சூடு பிடிக்கும் தேர்தல்களம்: 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி

சூடு பிடிக்கும் தேர்தல்களம்: 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி
Published on

100 நாள் பரப்புரையை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதற்கான முன்னோட்ட பணிகளில் அரசியல் தலைவர்களும் இறங்கிவிட்டனர். அதன்படி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாள் பரப்புரையை தொடங்கவுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது பரப்புரையை தொடங்கும் உதயநிதி முதற்கட்டமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com