\
பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்
Published on
பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ''முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com