கன்னியாகுமரியில் உதயநிதி ஸ்டாலினை பின்தொடரும் புல்லட்டுகள்! என்ன காரணம்?

திமுக இளைஞரணி மாநாடு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி மாநில மாநாடு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.

13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என்றுள்ளார். இவ்விழாவில் அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com