ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாஜக பிரமுகர் கூறிய Stalin is more dangerous karunanithi என்பதை தமிழக முதல்வர் நேற்றைய நிகழ்வு மூலம் நிரூபித்து காட்டியுள்ளார் என கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சென்னை அண்ணா சாலையில் உள்ள பூபேகம் தெருவில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு பகுதி செயலாளர் மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்மேரிஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுவின் சட்டமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசையும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் டி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம் வந்து விட்டதா என்று பொதுமக்களிடம் சத்தமாக கேட்டு உரையை தொடங்கினார். ''தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் கூறினார். ஒரு ஆங்கில நாளிதழ் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று கூறியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாஜக பிரமுகர் ஒரு காணொளி காட்சியில் சொன்னதைப் போல Stalin is more dangerous karunanithi என்பதை தனது செயல்பாடுகளின் மூலம் முதலமைச்சர் நிரூபித்து காட்டியிருக்கின்றார். அதற்கு நேற்று நடந்த நிகழ்ச்சியே சாட்சி. அனைத்து மாநிலத்திலும் அந்த சம்பவம் பற்றி பேசுகிறார்கள்.
வெள்ளி கிரிக்கெட் பேட். பேனாவை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை நினைவுப் பரிசாக வழங்க வேண்டும்" என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.