உதயநிதியை அமைச்சராக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை - டிசம்பர் 14ஆம் தேதி பதவியேற்பு

உதயநிதியை அமைச்சராக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை - டிசம்பர் 14ஆம் தேதி பதவியேற்பு
உதயநிதியை அமைச்சராக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை - டிசம்பர் 14ஆம் தேதி பதவியேற்பு

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிறிது காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த அவரை அமைச்சராக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனை இலைமறைக்காயாக உணர்த்தும் விதமாக கடந்த நவம்பர் 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளன்று, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், இதற்கு முந்தைய பிறந்த நாட்களில் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளித்து, காத்திருந்து உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வெளிவந்தன. இதற்காக ஆளுநரின் நேரத்தைப் பெறுவதற்காக ஏற்கனவே ராஜ்பவனுக்கு சம்பந்தப்பட்ட சில உயரதிகாரிகள் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. அவரிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராக உதயநிதி பதவியேற்கவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com