துணை முதலமைச்சர்
துணை முதலமைச்சர்புதியதலைமுறை

துணை முதலமைச்சராக உதயநிதி அறிவிக்கப்படுவாரா? திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை!

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. கட்சிகளின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Published on

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கட்சிகளின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

கட்சியின் பொருளாளர் டிஆர். பாலு , செயலாளர் ஆர் எஸ் பாரதி, ஆ. ராசா, திருச்சி சிவா, துரைமுருகன், பொன்முடி போன்றவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் துணை முதல்வராக உதயநிதியை அறிவிக்கவேண்டும் என்ற கட்சி தொண்டர்களின் கோரிக்கை பற்றி பரிசீலிக்கப்படுவதாகவும், கட்சியை வலுப்படுத்தவும் 2026ல் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியானது.

இருப்பினும், ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com