\
அமைச்சராக தனது சேவையை உதயநிதி தொடங்க வேண்டும் - அமைச்சர் மூர்த்தி

அமைச்சராக தனது சேவையை உதயநிதி தொடங்க வேண்டும் - அமைச்சர் மூர்த்தி

அமைச்சராக தனது சேவையை உதயநிதி தொடங்க வேண்டும் - அமைச்சர் மூர்த்தி
Published on

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தனது சேவையை தொடர வேண்டும் என மதுரையில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆணையூர், கூடல்நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 103 இடங்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, "முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திமுகவின் வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர். உதயநிதி அனைவரும் பாராட்டும் அளவில் செயல்பட்டு வருகிறார்.

வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வரவேண்டும். தமிழகம் முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.

மதுரைக்காக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பல வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். மதுரையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று துவங்கிய சாலை செப்பனிடும் பணிகள் ஒன்றரை மாதத்தில் நிறைவடையும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com