பவன் கல்யாண் - உதயநிதி ஸ்டாலின்
பவன் கல்யாண் - உதயநிதி ஸ்டாலின்புதிய தலைமுறை

சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பேச்சுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி!

சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துனை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சுக்கு “அவர் யாரை சொன்னார் என்று தெரியவில்லை. இருப்பினும் Let's wait and see” என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Published on

நேற்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில், “சனாதனம் ஒரு வைரஸ் போல, அதை ஒழிப்போம் என்று தமிழ்நாட்டில் ஒரு நாயகர் (இளம் தலைவர்) சொல்கிறார். திருப்பதி பெருமாள் முன்னிலையில் சொல்கிறேன், சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவர்” என்று மறைமுகமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார்.

இதுபற்றி இன்று நிருபர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்டபோது, அவர் “Okay, Let's Wait and see” எனக்கூறியுள்ளார். அந்தக் காணொளியை, இங்கே காணலாம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com