இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி சென்றுள்ளார் -அமைச்சர் ஜெயக்குமார்

இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி சென்றுள்ளார் -அமைச்சர் ஜெயக்குமார்

இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி சென்றுள்ளார் -அமைச்சர் ஜெயக்குமார்
Published on

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் எனஅமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்“ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஒளிவுமறைவு இன்றி கணக்கு கொடுக்கப்படுகிறது. மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாயப் பிரச்னை. அவர் அதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.  மேலும் தனியார் நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முதல்வர், அமைச்சர்கள் கொள்ளையடித்து வருகின்றனர் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பியதற்கு அவருடைய எண்ணத்தையும், செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார் என ஜெயக்குமார் கூறினார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com