
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அல்லது விபத்து ஏற்படுத்தும் வகையிலோ இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ அல்லது சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாலோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக சாலையில் பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற இளைஞரும், திருச்செந்தூரில் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் டேனியல் என்ற இளைஞரும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.