மீன்களை எளிதாக பிடிக்க இளைஞர்கள் செய்த விபரீத முயற்சி.. பறிபோன 2 உயிர்கள்! நடந்தது என்ன?
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பெரிய ஆற்றில் அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய இரு இளைஞர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றுள்ளனர்.
அவர்கள் ஆற்றில் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து
வயர் மூலம் மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல் துறையினர், உடல்களை மீட்டு கூறாய்வுக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணையில் போலீஸார்..
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ்
சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயிரிழந்தவர்களுடன் மேலும் சில இளைஞர்கள் மீன்பிடிக்க வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கிராமத்தில் ஏற்கெனவே சிலர் இதுபோன்று சட்டவிரோதமாக மீன்பிடித்து வந்ததை கிராமமக்கள் கண்டித்த நிலையில், அதனை பொருட்படுத்தாததால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கின்றனர்.