\
கால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்

கால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்

கால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்
Published on

சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநரை தாக்கிய இருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநரான தமிழ்ச்செல்வன் நேற்றிரவு பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில்‌, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர், வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கார் கிடைக்கும் என்று தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

இந்த பதிலால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமிழ்ச்செல்வனை சரமாரியாகத் தாக்கியதுடன், அவர் வைத்திருந்த நான்காயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com