திருப்பூர்: தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுமி படுகாயம்

திருப்பூரில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெரு நாய்கள்
தெரு நாய்கள்file image

திருப்பூர் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டட வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஆறு தெரு நாய்கள் சிறுமியை கடித்துக் குதறியுள்ளது.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்pt desk

இதில், படுகாயமடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவார காலம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com