சென்னை: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

மேடவாக்கத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
Death
Deathpt desk

செய்தியார்: சாந்த குமார்

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரிகிருஷ்ணன் - அபிநயா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகாவை திடீரென காணவில்லை. இதையடுத்து அவரது தாயார் அபிநயா தேடிப் பார்த்துள்ளார்.

Girl baby
Girl babypt desk

அப்போது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தன்ஷிகா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை காவல் துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com