நகைக்கடையில் திருடிய இரண்டு பெண்கள் - சிசிடிவியில் அம்பலம்
சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரண்டு பெண்கள் நகைகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம் ஜூவல்லரி என்ற நகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடையில் சிறுசிறு பொருட்களாக சுமார் 150 கிராம் நகைகளை ஒரு சிறிய பெட்டியில் வைத்துள்ளார். நேற்று இவருடைய கடைக்கு வந்த 2 பெண்கள், நகை வாங்குவது போல வந்து தருண்குமாரின் கவனத்தை திசைதிருப்பி நகை இருந்த பெட்டியை திருடி சென்றனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் ஒரு பெண் கடை உரிமையாளரிடம் நகைகளை காட்ட சொல்வது போல கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொரு பெண் கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் கீழே நகை இருந்த பெட்டியை எடுத்து செல்வதுபோல காட்சிகள் வெளியாகி உள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை போலீசார் நகையைத் திருடி சென்ற பெண்களை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

