குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - மதுரை சிறையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாவோயிஸ்ட் உள்ளிட்ட இரண்டு பெண்கள் மதுரை மத்திய சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, மதுரை மத்திய சிறையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி என்ற பெண் மாவோயிஸ்ட் மற்றும் ஜெயசுதா என்ற பெண் கைதியும் நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பெரியகுளம் பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய பெண்கள் சிறையில் உள்ளவர் செண்பகவள்ளி. கார் ஓட்டுநரை கடத்தி வந்து, மேலூரை அடுத்த கொட்டாம்பட்டியில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் ஜெயசுதா.