விபத்துFile Photo
தமிழ்நாடு
திருச்சி: வயலில் அறுந்து கிடந்த மின்கம்பி - இரண்டு பெண் கூலித் தொழிலாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திருச்சி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி சோமரசன்பேட்டை அருகே மல்லியம்பத்து எட்டு மாதிடலையைச் சேர்ந்தவர்கள் ராதிகா மற்றும் செல்வி. இவர்கள் இருவரும் விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக இன்று காலை வயலுக்குச் சென்றுள்ளனர். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த ராதிகா, செல்வி ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tragedypt desk
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பியை அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.