Two wild elephants enter residential area near Gudalur – villagers panic
Two wild elephants enter residential area near Gudalur – villagers panicpt web

கூடலூர் : திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பொதுமக்கள் அச்சம்!

கூடலூர் அருகே இன்று காலை திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததோடு, மைதானத்தில் நடமாடிய இரண்டு காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். 
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ளது மாவனல்லா கிராமம். இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை திடீரென இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து இருக்கின்றன. அந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மைதானத்திலும் நடமாடியுள்ளன.

தொடர்ந்து ஊட்டி - மசினகுடி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றனர். இரண்டு யானைகளும் திடீரென ஊருக்குள் வந்ததால் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com