குவைத்
குவைத்முகநூல்

குவைத்: குளிருக்காக மூட்டிய புகை... இறுதியில் 2 தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்!

குவைத்: குளிருக்காக மூட்டிய புகை... இறுதியில் 2 தமிழர்கள் உட்பட மூவர் பலி. இறந்தவர்களின் உடலை எடுத்து வர போதிய வசதி இல்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
Published on

குவைத் நாட்டில் குளிருக்கு புகை மூட்டிய 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடலை எடுத்து வர போதிய வசதி இல்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், மங்களம்பேட்டையை சேர்ந்த முகமது ஜூனைது, முகமது யாசின் ஆகியோர் குவைத் நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தனர். அவர்களுடன் திருவண்ணாமலையை சேர்ந்த கவுல் பாட்ஷா, உத்தரப்பிரதேசத்தை இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளனர்.

குவைத்
ம.பி | தன் மீது மோதிய காரை அடையாளம் கண்டு சம்பவம் செய்த நாய்.. சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி!

பாலைவனப் பகுதியில் தங்கியிருந்த அவர்கள், கடும் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டிய போது அதிக புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். இதில் முகமது ஜூனைது, முகமது யாசின் மற்றும் உத்தரபிரதேச இளைஞர் உயிரிழந்தனர். கவுல் பாட்ஷா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இது குறித்து அறிந்த உறவினர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். போதிய வசதி இல்லாததால் உடலை தமிழகம் கொண்டு வர முடியாது என்றும், மிகுந்த ஏழ்மையில் வாழும் தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com