தொண்டிக்கு வந்த இலங்கை தமிழர்கள் - அகதிகளா? கடத்தல்காரர்களா? போலீசார் சந்தேகம்

தொண்டிக்கு வந்த இலங்கை தமிழர்கள் - அகதிகளா? கடத்தல்காரர்களா? போலீசார் சந்தேகம்

தொண்டிக்கு வந்த இலங்கை தமிழர்கள் - அகதிகளா? கடத்தல்காரர்களா? போலீசார் சந்தேகம்
Published on

தொண்டி பகுதிக்கு வந்த 2 இலங்கை தமிழர்கள், அகதிகளா? கடத்தல்காரர்களா என பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை பகுதியில் இலங்கையிலிருந்து தமிழர்கள் 2 பேர் வந்துள்ளதாக தொண்டி கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீசார், இலங்கையிலிருந்து வந்த ஜெயசீலன், அருள்ராஜ் ஆகிய இருவரை தொண்டி மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையிலிருந்து வந்த இரண்டு தமிழர்கள் போதிய அளவிலான உடமைகள் ஏதும் எடுக்காமல் வந்ததாகவும் இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார், இரண்டு இலங்கை தமிழர்களை அகதிகளாக வந்தவர்களா அல்லது கடத்தலில் ஈடுபடுவதற்காக வந்தவர்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com