அலையில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள் - மெரினா கடலில் குளித்த போது நேர்ந்த பரிதாபம்!

அலையில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள் - மெரினா கடலில் குளித்த போது நேர்ந்த பரிதாபம்!

அலையில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள் - மெரினா கடலில் குளித்த போது நேர்ந்த பரிதாபம்!
Published on

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் 9 மாணவர்களும் குளித்து வந்தனர்.

திடீரென குளித்து கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். அதிர்ச்சியடைந்த  சக மாணவர்கள் இது குறித்து மெரினா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் தீவிரமாக தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு பலியான நிலையில் இரு மாணவர்களின் உடலும் கரை ஒதுங்கியது. போலீசார் மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருநின்றவூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஹரிஷ்(13) மற்றும் ஆகாஷ்(15) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com