\
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா..!

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா..!

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா..!
Published on

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக்காவலருக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை தொடர்ந்து அவரை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைப்போல, நுங்கம்பாக்கம் உளவுத்துறை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்க உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் முதல் நிலை காவலருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரானா தொற்று உறுதியான நிலையில் தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவருக்கும், ஆண் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com