நெல்லை: இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தபடி இருந்த நபர்கள்; வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் மீட்பு

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை, கீழநத்தம் பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டு நபர்கள் இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்து இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com