கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் - காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு

கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் - காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு
கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் - காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு

காஞ்சிபுரம் அருகே வீட்டில் போலி மதுபானம் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரித்த ஒரு பெண் உள்பட இருவர் கைது; அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு இயந்திரத்துடன் 14 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த போலி மதுபானத் தொழிற்சாலையினை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவினரும், தமிழக அமலாக்கத் துறையின் அங்கமான மத்திய புலனாய்வுப் பிரிவினரும் சோதனையிட்ட போது, அங்கிருந்த எாிசாராயம் (105 லிட்டா்) மற்றும் போலி மதுபானம் தயாாித்திடும் உபகரணங்கள், போலி முப்பாிமாண முத்திரைகள், உணவு நிறமிகள் மற்றும் நகலெடுக்கப்பட்டு வெட்டிமுடிக்கப்படாத கள்ள நோட்டுக்கள் (ரூபாய். 1411200/-) ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் அரக்கோணத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்மணி துளசி என்பவரும், சித்திரைமேடு பகுதியை சேர்ந்த 40 வயதுடைய கலையரசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள கிளைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில், சுமார் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

வருகிற சட்டமன்ற தேர்தலில் கிராம பகுதியில் உள்ள  பொதுமக்களுக்கு  இந்த பணத்தை வினியோகம் செய்வதற்காக கள்ளநோட்டு அடிக்கும் பணி நடைபெற்ற இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணைை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com