\
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - வீடியோ

சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - வீடியோ

சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - வீடியோ
Published on

சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்கள், வாகனங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது,‌ அடையாளம் தெரியாத கும்பல், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது. 

மேலும், அண்மைக்காலமாக காந்தி நகர் பகுதியில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களிலும் அந்த கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காந்தி நகர் பகுதிகளில் கிடைக்கப் பெற்ற சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com