தாயுடன் நெருக்கம்.. மகள் மீது விருப்பம்.. குறுக்கே வந்த பாட்டியை குத்திக் கொன்ற கொடூரன்

தாயுடன் நெருக்கம்.. மகள் மீது விருப்பம்.. குறுக்கே வந்த பாட்டியை குத்திக் கொன்ற கொடூரன்

தாயுடன் நெருக்கம்.. மகள் மீது விருப்பம்.. குறுக்கே வந்த பாட்டியை குத்திக் கொன்ற கொடூரன்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் தனம்(65). இவரது கணவர் கந்தசாமி இறந்துவிட்டார். தனது 3 மகன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். ஆகவே இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மூன்றாவது மகன் இறந்து போய் விட்டார். அதன் பிறகு மருமகள் விஜயா தர்மபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜயாவின் மகள் வசந்தி என்பவர் தனது பாட்டி தனத்துடன் வளர்ந்து வந்துள்ளார். வசந்தி கல்லூரியில் படித்து கொண்டு மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பேத்தி வசந்தி மீது சாமுவேலுக்கு மகளை ஒத்தவர் என்பதை கூட பாராமல் ஒருமனதாக விருப்பம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது.

இதனிடையே மகள் வசந்தியை தன்னுடன் அனுப்ப வேண்டுமென தாய் விஜயா, ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் 18 வயது நிரம்பி வசந்தி தாயுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் என்பவர் வசந்தியை கடத்த முயற்சி செய்ய ஆசிட் மற்றும் கத்தியுடன்  வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது வீட்டில் பாட்டி தனம் மட்டும் தனியாக இருந்துள்ளர். அவரிடம் வசந்தியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டி தனம் கூச்சல் போட்டுள்ளார். அதனைக் கேட்டு உடனடியாக அப்பகுதி மக்கள் கூடி உள்ளனர். கூட்டத்தை கண்டு பயந்துபோன சாமுவேல், யாராவது அருகில் வந்தால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அப்பகுதி மக்கள் மீது ஆசிட்டையும் வீசியதாக சொல்லப்படுகிறது.

இதனால் சில காவல்துறையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் மீது ஆசிட் பட்டு காயமடைந்துள்ளனர். சிலரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து உள்ளே மாட்டித் தவித்த மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும் சாமுவேல் வீட்டில் இருந்த மூதாட்டி தனத்தின் மீது ஆசிட் வீசி,  வெட்டி கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு அவர் வெளியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை தாக்க முயற்சித்துள்ளார். இந்தச் சண்டையில் ஆத்திரமுற்ற பொதுமக்கள் தடியைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மூதாட்டியை தாக்கி கொலை செய்த நபரை பொதுமக்களே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com