நாயை காணல சார்: போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ’குபுக்’ பஞ்சாயத்து!

நாயை காணல சார்: போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ’குபுக்’ பஞ்சாயத்து!

நாயை காணல சார்: போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ’குபுக்’ பஞ்சாயத்து!
Published on

ஒரு நாய்க்கு 2 விவசாயிகள் உரிமை கோரியதால், அந்த நாய் யாருடையது என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் சுவாரஸ்யமான பஞ்சாயத்து நடந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுள வடகரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது மாந்தோப்பில், ராமு என்ற நாட்டு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரும் ஒரு நாயை வளர்ந்து வந்தார். இவரது நாயை கடந்த சில மாதங்களாக காணவில்லை. அதைதான் பாண்டியன் வளர்த்துவருகிறார் என்று கூறி, பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பார்த்திபன்.

இந்நிலையில் காவல்துறையினர் நாயை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து நிறுத்தினர். இரண்டு தரப்பிலும் ஆதரவாளர்களுடன் நாய்க்கு சொந்தம் கொண்டாடியவர்கள் கூடியிருந்தனர். நாக்கைத் தொங்க போட்டபடி நாய் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருக்க, விசாரணை நடந்தது. ’இது என்ன சாதாரண நாயா?’ என்று இரண்டு பேருமே அதன் அருமை பெருமைகளைச் சொல்ல, போலீசாருக்கு குழப்பம். பிறகு ஒரு முடிவுக்கு வந்தது போலீஸ்.

‘இங்க பாருங்கய்யா. பொதுவான ஒரு மாந்தோப்புல நாயை விடுவோம். அது யார் தோப்புக்கு ஓடிப்போகுதோ, அவங்க நாயை வச்சுக்குங்க’ என்று கம்பீரமாகத் தீர்ப்புக் கூறினர். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இது மாங்காய் சீசன் என்பதால் மாந்தோப்பு காவலுக்கு நாய்கள் தேவை. நாய்க்காக இப்படி உரிமை கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான் என்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com