தமிழ்நாடு
மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு: மின்சாரத்தை திருடியவர் தலைமறைவு
மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு: மின்சாரத்தை திருடியவர் தலைமறைவு
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியில் மின்சாரத்தை திருட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் தங்கராசு. அவருக்கு சொந்தமான விளைநிலத்தில் இருந்த மின்கம்பத்திலிருந்து தேவேந்திரன் என்பவர் மின்சாரத்தை திருடி சாதாரண கம்பியில் மின்வேலி போல் அமைத்துள்ளார். அது தெரியாமல், தங்கராசும், அவரது தந்தையும் இன்று காலை விளைநிலத்திற்கு சென்றபோது சாதாரண கம்பி என நினைத்து மின்சாரக் கம்பியை தொட்டுள்ளனர்.
அதில் மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட தேவேந்திரனைத் தேடி வருகின்றனர்.