காரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

காரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

காரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது
Published on

சென்னையில் காரில் மதுபானத்தை கடத்திய வழக்கறிஞர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 205 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஆனால் சிலர் நேற்று சென்னையின் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக அதிக மதுபானங்களை வாங்கி சென்னை கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்ப்டி மதுபாட்டில்களுடன் சென்னை வருபவர்களை பிடிக்க போலீசார் வாகன சோதனை நடத்தினர். 

அதனடிப்படையில் நேற்று இரவு அயனாவரம் எம்.டி.எச் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போதையில் கார் ஓட்டி வந்து பழக்கடையின் மீது மோதினார். இதனால் பழக்கடை உரிமையாளர் காரின் உள்ள நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

அப்போது காரை ஓட்டிய நபரிடம் விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது காரினை சோதனை செய்த போது சுமார் 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை பிடித்து விசாரித்த போது அவர் செம்பியத்தை சேர்ந்த ரத்தினகுமார் என்பதும் இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதும் தெரியவந்தது.

இதே போல் ஓட்டேரி கே.எச் சாலையில் நேற்று இரவு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருப்பதாக தலைமை செயலக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் காரை சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 105 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது ஓட்டேரி பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com